Thursday, October 20, 2011

மாற்றங்களை வரவேற்கும் மனசுள்ள மக்கள்:திருவண்ணாமலை மாவட்ட நிலவரம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, ஆரணி, வந்தவாசி (தனி), செங்கம் (தனி), போளூர், செய்யாறு, கலசப்பாக்கம் மற்றும் பெரணமல்லூர் ஆகிய ஒன்பது தொகுதிகள் இருந்தன. மறு சீரமைப்புக்கு பின் தண்டராம்பட்டு, பெரணமல்லூர் ஆகிய இரு தொகுதிகள் நீக்கப்பட்டு, புதிதாக கீழ்பென்னாத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
செங்கம் (தனி): காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, மறைந்த போளூர் வரதன் இந்த தொகுதியில், எம்.எல்.ஏ.,வாக இருந்தார். செங்கம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தவில்லை. திருவண்ணாமலை - பெங்களூரு சாலை
தரம் உயர்த்தப்படாத நிலை. பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லை; பால் குளிரூட்டும் நிலையம் துவக்க, துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ஆனால், திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
ஏரிகளில் தூர்வாராததால் மழை நீரை தேக்கி வைத்து விவசாயம் செய்ய முடியவில்லை. 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மேல் செங்கம் அரசு விதைப்பண்ணை மூடப்பட்டுள்ளது. தொழிற்சாலை எதுவும் இல்லாததால், பிழைப்பு தேடி பெங்களூருக்கு செல்ல வேண்டியுள்ளது. தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கடுமையாக மல்லுகட்டும்.
திருவண்ணாமலை: தி.மு.க.,வைச் சேர்ந்த பிச்சாண்டி இந்த தொகுதி, எம்.எல்.ஏ.,வாக உள்ளார். விவசாயிகளுக்கு உழவர் சந்தையைத் தவிர, வேறு எந்தப் பணியும் குறிப்பிடும்படி செய்யவில்லை. வேலை வாய்ப்பை
உருவாக்க வழிவகை செய்யாததால் பெங்களூரு, திருப்பூர் போன்ற நகரங்களுக்கு பிழைப்பைத் தேடி இடம்பெயரும் அவலம் உள்ளது. எனினும், இந்தத் தொகுதி தி.மு.க., கோட்டையாகவே இருந்து வருகிறது.கீழ்பென்னாத்தூர்: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கீழ்பென்னாத்தூர் தொகுதியில், பிச்சாண்டி போட்டியிடுகிறார். சொந்த செல்வாக்கில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
கலசப்பாக்கம்: இந்த தொகுதியில் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ., அக்ரிகிருஷ்ணமூர்த்தி உள்ளார். மீண்டும் இந்தத் தொகுதியில் அவரே போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியாக இருந்ததால் தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளைத் தவிர வேறு எதுவும் குறிப்பிடும்படி செய்ய முடியவில்லை. எனினும், மக்களிடம் நல்ல செல்வாக்கை பெற்றவர். மீண்டும் அவரே சொந்த செல்வாக்காலும், கூட்டணி பலத்தாலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
போளூர்: காங்கிரசைச் சேர்ந்த விஜயகுமார் இங்கு எம்.எல்.ஏ.,வாக உள்ளார். விவசாயிகள் பயன்பெறும் திட்டங்கள் எதுவும் செய்யவில்லை. போளூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்தவில்லை. செண்பகத்தோப்பு அணையை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. விஜயகுமார் எளிமையாக பழகக்கூடியவர் என்பதால் இவர் மீது அதிருப்தி இல்லை. அதே சமயம் பலத்த வரவேற்பும் இல்லை.
ஆரணி: தி.மு.க., வை சேர்ந்த சிவானந்தம் இந்த தொகுதி எம்.எல்.ஏ., வாக உள்ளார். மீண்டும் போட்டியிடுகிறார். இதுவரை இங்கு தொடர்ந்து ஒருவரோ அல்லது ஒரே கட்சியோ வெற்றி பெற்றதில்லை. ஆரணியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படவில்லை, ஆரணி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படாத நிலை, குடிநீர்ப் பிரச்னை, பட்டு ஜரிகை உற்பத்தி தொழிற்சாலை, பட்டு சாயப்பட்டறை தொழிற்சாலை, நெசவாளர்களுக்கான மூலப்பொருள் விற்பனை செய்யும் அங்காடி, உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள் விற்பனை செய்வதற்கான கொள்முதல் நிலையம் அமைக்கப்படாத நிலை உள்ளது.ஆரணியில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி கொண்டு வந்தது தவிர வேறு எதுவும் குறிப்பிடும்படி செய்யப்படவில்லை. சொந்த நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டவர் சிவானந்தம் என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மீண்டும் தி.மு.க., வெற்றி பெறுவது கடினம். அ.தி.மு.க.,வுக்கு வாய்ப்புள்ளது.
செய்யாறு: தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சேர்ந்த விஷ்ணுபிரசாத் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். விவசாயிகளுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படவில்லை. "சிப்காட்' தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளதால், வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் என்பதால், எளிதாக மக்கள் சந்திக்க முடியாத நிலை.
                                                                                    by
                                              arasu
தமிழ்நாடு
தமிழ்நாடு (Tamil Nadu) ஓர் இந்திய மாநிலமாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. மதராசு மாநிலம் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது

புவியமைப்பு


தமிழ்நாடு இந்திய தீபகற்பத்தின் தெற்குக் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், மேற்கில் கேரளாவும் உள்ளன. யூனியன் பிரதேசமாகிய புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது.

நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் "வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று" மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.

இம்மாநிலத்தின் முக்கிய ஆறான காவிரி ஆறு வடக்கே கர்நாடக மாநிலத்தில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. வைகை, தாமிரபரணி ஆகியவை பிற முக்கிய ஆறுகளாகும்.

மதராஸ் என்று 1996 வரை அழைக்கப்பட்டு வந்த சென்னையே மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் தலைநகரமுமாகும். உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனா கடற்கரை சென்னையிலேயே உள்ளது. திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி,  சேலம், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி மற்றும் வேலூர் தமிழ் நாட்டின் ஏனைய பெரிய நகரங்களாகும்.

வரலாறு
சோழ,சேர,பாண்டிய மன்னர்களால் ஆளப்பெற்று பல கோயில்களையும், சிற்பங்களயும் பெற்ற கலை அம்சம் கொண்ட பகுதியாக விளங்குகிறது. "வட வேங்கடம் தென் குமரி தமிழ் கூறு நல்லுலகு" என்கிறது தொல்காப்பியப் பாடல்.

தமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் (origin) தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருத்த திராவிடர், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்பு படுத்தப் படுகின்றது. இக் கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.

இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய திராவிட நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள், பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர்.

பாண்டியர்களுடைய காலம் கிமு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகின்றது. மதுரை முதற் பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. இவர்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப் பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் பலம் மிக்க அரச வம்சங்களில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.

கிபி 1 தொடக்கம் 4 ஆம் நூற்றாண்டு வரை
முற்காலச் சோழர் கிபி முதலாம் நூற்றாண்டு தொடக்கம் நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் மிகப் புகழ் பெற்றவனாக கரிகால் சோழன் விளங்கினான். தற்காலத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய இவர்கள், யுத்த நடவடிக்கைகளில் சிறந்து விளங்கினர்.

கிபி 4 தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டு வரை
கி.பி நான்காம் நூற்றாண்டின் பிற்பாதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகின்றது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். திராவிடக் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராஜிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது.
இக்காலகட்ட பகுதியில் (கிபி 300 - கிபி 600) பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.(1)

9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டு வரை
கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராஜராஜ சோழன் மற்றும் அவனது மகனான இராஜேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஒரு பலம் மிக்க சக்தியாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மத்திய இந்தியா, ஒரிஸ்ஸா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது.

இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, ஜாவா, மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.

14ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316 இல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்ஜி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இஸ்லாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் பலவீனப்படுத்தி இஸ்லாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இஸ்லாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விஜயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர். ஹம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விஜய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.


ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விஜயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டது. நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு அமைதியுடனும் செழிப்புடனும் விளங்கியது.தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களை புதுப்பிக்கவும் செய்தனர்.

இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.

17 ஆம் நூற்றாண்டு
1639 இல் ஆங்கிலேயர்கள் மதராஸில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு , அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தை தம் வசப்படுத்திய இந்த காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். மாவீரன் அழகுமுத்துக்கோன், மருதநாயகம், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர், பூலித்தேவன். வீரன் சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, ஒண்டி வீரன், வெண்ணி காலடி தீரன் சின்னமலை, கட்டன கருப்பணன் போன்றோர் ஆட்சியாளர்களுக்கு வெள்ளையரை எதிர்த்து போரிட படைகளை தலைமையேற்று நடத்தினர்.

20 ஆம் நூற்றாண்டு

1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராஸ் மாகாணம் மதராஸ் மாநிலம் ஆனது. தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராஸ் மாநிலத்தின் கீழ் வந்தது. 1953இல் மதராஸ் மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராஸ் மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராஸ் மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்னாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1968இல், மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பாரம்பரியம்

தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது இந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று.

சுப்பிரமணிய பாரதி, வ. உ. சிதம்பரம்பிள்ளை, சி. வி. இராமன், பெருந்தலைவர் காமராசர், சுப்பிரமணியன் சந்திரசேகர், ஆர். கே. நாராயண், சி. என். அண்ணாதுரை , ஈ.வெ.ராமசாமி (பெரியார்), சீனிவாச ராமானுஜன், அப்துல் கலாம், ஆகியோர் மாநிலத்தின் பிரபலமானவர்களுடள் சிலராவர். இவர்களோடு, கண்ணகி, திருவள்ளுவர்,தொல்காப்பியர் , ஔவையார், கம்பர், கரிகால்சோழன், இராஜராஜ சோழன் போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாகும்.

அரசியல்
தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிகள் தேர்ந்து எடுக்கப் படுகின்றனர்.


தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன. காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, மார்க்சிய கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் மற்றும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் ஆகியவையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.

ஈ.வெ.ராமசாமி (தந்தை பெரியார் என்று அறியப்படுகிகிறார்) 1916இல் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து, 1949இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை (தி.மு.க, D.M.K) சி. என். அண்ணாதுரை தோற்றுவித்தார். 1947 இல் இந்திய விடுதலைக்குப் பிறகு 1967 வரை தமிழ் நாட்டை காங்கிரஸ் கட்சி ஆண்டது.1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1972இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அ.தி.மு.க) எம்.ஜி.ராமச்சந்திரன் தோற்றுவித்தார். 1977இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது.

1967 முதல் 2006இல் கடைசியாக நடந்த சட்ட மன்ற தேர்தல் வரை தி.மு.க அல்லது அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று (அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள்) பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன.தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உண்டு என்றாலும், இது வரை தனிக் கட்சி ஆட்சியே நடை பெறுகிறது. இருப்பினும், தமிழக கட்சிகள் நடுவண் அரசில் கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும் பங்கேற்கவும் செய்கின்றன.

தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு,தாழ்த்தப்பட்டோர் மற்றூம் சிறுபான்மை சமூகத்தின் நலன், இட ஒதுக்கீடு, காவிரி நதி நீர்ப் பங்கீடு பிரச்சினை, விவாசாயிகள், பாமரர் மற்றும் நலிவடைந்த பிரிவினர் நலன், ஊழல் ஆகியவை தமிழ் நாட்டு அரசியலில் முக்கியத்துவம் உள்ளவை.


தமிழ் நாட்டில் 32 மாவட்டங்கள் உள்ளன.


1. அரியலூர் மாவட்டம்

2. இராமநாதபுரம் மாவட்டம்

3. ஈரோடு மாவட்டம்

4. கடலூர் மாவட்டம்

5. கரூர் மாவட்டம்

6. கன்னியாகுமரி மாவட்டம்

7. காஞ்சிபுரம் மாவட்டம்

8. கிருஷ்ணகிரி மாவட்டம்

9. கோயம்புத்தூர் மாவட்டம்

10. சிவகங்கை மாவட்டம்

11. சென்னை மாவட்டம்

12. சேலம் மாவட்டம்

13. தஞ்சாவூர் மாவட்டம்

14. தர்மபுரி மாவட்டம்

15. திண்டுக்கல் மாவட்டம்

16. திருச்சிராப்பள்ளி மாவட்டம்

17. திருநெல்வேலி மாவட்டம்

18. திருப்பூர் மாவட்டம்

19. திருவண்ணாமலை மாவட்டம்

20. திருவள்ளூர் மாவட்டம்

21. திருவாரூர் மாவட்டம்

22. தூத்துக்குடி மாவட்டம்

23. தேனி மாவட்டம்

24. நாகப்பட்டினம் மாவட்டம்

25. நாமக்கல் மாவட்டம்

26. நீலகிரி மாவட்டம்

27. புதுக்கோட்டை மாவட்டம்

28. பெரம்பலூர் மாவட்டம்

29. மதுரை மாவட்டம்

30. விருதுநகர் மாவட்டம்

31. விழுப்புரம் மாவட்டம்

32. வேலூர் மாவட்டம்


மக்கள்
தமிழ்நாடு இந்தியாவின் ஏழாவது மக்கட்தொகை மிகுந்த மாநிலமாகும். சூலை 1, 2008-இல் மக்கட்தொகை 66,396,000. இந்தியாவிலேயே அதிகப்படியாக 44% மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர். 89 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தமிழை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். தெலுங்கு (5.65%), கன்னடம் (1.68%), உருது (1.51%), மலையாளம் (0.89%) ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன.

பழங்குடிகள்
தமிழகத்தன் மக்கட்தொகையில் 3.5% மக்கள் பழங்குடிகள்(2001 கணக்கெடுப்பு). மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்ட பழங்குடிகள் உள்ளனர். நீலகிரி, ஆனைமலை, கொல்லிமலை ஆகிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தோடர், காடர், குறும்பர், காணிக்காரர், மலமலசர், பணியர், பழியர் முதலிய பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர்.



பொருளாதாரம்
தமிழ்நாடு, நல்ல தொழில் வளர்ச்சி கண்டுள்ள ஒருசில இந்திய மாநிலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. தமிழக மக்கள் தொகையில் குறிப்பிடத் தகுந்த பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் நெசவாலைகளுக்கும், ஈரோடு மஞ்சள் சாகுபடி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், சேலம் இரும்பு உருக்கு ஆலைகளுக்காகவும், நாமக்கல் கோழிப் பண்ணைகள், குழாய்க் கிணறுஆழ் குழாய்க் கிணறு அமைக்கும் தொழில், பண்டங்களை போக்குவரவு செய்யும் கனரக வாகனங்களை இயக்கும் தொழிலுக்காகவும், சிவகாசி அச்சுத் தொழில், பட்டாசு உற்பத்திக்கும், காவிரி பாசன பகுதியில் அமைந்துள்ள திருச்சி, வேலூர் தோல் தொழிலுக்கும், தஞ்சை போன்ற பகுதிகள் விவசாயத்திற்கும், சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன.பாலிவுட் என அழைக்கப்படும் மும்பை திரைப்படத் துறைக்கு அடுத்ததாக, தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத் தொழில் மையமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், பெருமளவில் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் சினிமாப் படங்கள் தமிழ் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டின் ஏழ்மை நிலை
தமிழ்நாடு பலமுனைகளில் வளர்ச்சியடைந்து வந்தாலும் கணிசமான மக்கள் ஏழ்மைக் கோட்டுக்கு கீழேயே வாழ்கின்றார்கள். 1999/00 கணிப்பீட்டின் படி 12-17 மில்லியன் மக்கள் அல்லது 21 விழுக்காடு மக்கள் ஏழ்மைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றார்கள்.[1]

சமூக வளர்ச்சி
சமூக முன்னேற்றத்தின் குறியீடுகளான பரவலான கல்வியறிவு, ஆண் - பெண் சமத்துவம், மேம்பட்ட பொது சுகாதாரம், நீண்ட சராசரி மனித ஆயுள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு , வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி அகியவற்றில் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது.

விழாக்கள்
பொங்கல் திருநாள் (தமிழர் திருநாள் அல்லது உழவர் திருநாள் என்றும்அழைகப்படுகிறது), தமிழர்கள் கொண்டாடும் முக்கிய திருநாள் ஆகும். தமிழ் மாதமான தை முதல் நாள் (ஜனவரி 14 அல்லது 15) இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

நோன்பு பெருநாள், பக்ரீத், முகரம் இஸ்லாமியப் புத்தாண்டு

பொங்கல் தவிர தீபாவளி, தைப்பூசம், வினாயகர் பிறந்த நாள், சரஸ்வதி (கல்விக் கடவுள்) பூஜை, ஆயுத பூஜை , கிறிஸ்துமஸ், புனித வெள்ளி போன்ற சமயம் சார்ந்த திருநாட்களும் கொடைக்கொண்டாட்டமாம் சித்திரைத்திருநாளும் (சித்திரை மாதம் முதல் நாள் - ஏப்ரல் 14 அல்லது 15) மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் நடைபெறுகின்றன

சுற்றுலாத்துறை
தமிழ்நாடு அழகிய நிலப் பகுதிகள், பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த சுற்றுலா முக்கியத்துவம் உள்ள மாநிலமாகும். தமிழ்நாடு, திராவிட கட்டிடக் கலை பாணியைப் பிரதிபலிக்கும் கோயில்களுக்குப் புகழ் பெற்றது.இக்கோயில்களுக்கு வியக்க வைக்கும் கோபுரங்களும் ரதங்களும் அழகு சேர்க்கின்றன.சோழர் கால தஞ்சை பெரிய கோவிலும் பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும் கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன. தஞ்சை, மதுரை, சுவாமிதோப்பு மற்றும் காஞ்சி ஆகியவை கோயில் நகரங்களாகத் திகழ்கின்றன.கன்னியாகுமரி கடல் முனையில் அமைந்துள்ள வள்ளூவர் சிலையும் காண வேண்டிய இடமாகும். எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்கு கடற்கரை பகுதிகள் போன்ற மனம் கவரும் தலங்களும் உண்டு.
                                                                       BY
'                                                                                                                    arasu











கே.ஜே.யேசுதாஸ் கண்ணீரின் கானம்

“யேசுதாஸ் மிக அழகான குண்டுப் பெண் ஒருத்தியிடம் காதல் கொண்டிருந்தார். ஒரு கொடூரமானவன் அப்பெண்ணைக் கற்பழிக்க முயன்றான். அப்போது யேசுதாஸ் தனது வாளை எடுத்துச் சுழற்றி சண்டையிட்டு அவனைக் கொன்று விட்டார். நீ அவசியம் அந்த வாள் ‘ஃப்ளெயிட்டைப்’ பார்க்கவேண்டும்! என்னா ஒரு ஃப்ளெயிட்!வாள் சண்டையில் யேசுதாஸை அடிக்கவே முடியாது” தான் முதன் முதலாகப் பார்த்த சினிமாவின் கதையை வசீகரமாகச் சொல்லிக் கொண்டிருந்தான் தங்கன். ஊரில் சில்லறை வேலைகளைப் பார்த்துத் திரிந்துகொண்டிருந்த பதினாறு வயதான அவன் பள்ளிக்கூடம் சென்றதில்லை. பத்து வயதான எனக்கு ஊர்க்கதைகளையும் பாலியல் அறிவையும் தங்கு தடையில்லாமல் வழங்கிக் கொண்டிருந்தவன். வயல்களில் சின்னச் சின்ன மீன்களைப் பிடித்துக்கொண்டும் குன்றுகளில் துடலிப்பழங்களைப் பறித்துக்கொண்டும் நாங்கள் இருவரும் காடு கரையென ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தோம்.
அவன் சொல்லும் ஆர்வமிக்க தகவல்களை ரசித்துக்கொண்டும் நம்பிக்கொண்டும் இருந்த எனக்கு யேசுதாஸைப் பற்றிய அவனின் சினிமாக்கதை ஏமாற்றமளித்தது. யேசுதாஸ் சினிமாவில் வாள் சண்டை போடுகிறாரா? வாய்ப்பே இல்லை! ஆனால் தங்கன் அது யேசுதாஸ்தான் என்பதில் மிக உறுதியாக இருந்தான். ஏனெனில் அந்தப் படத்தில் அவர் பாடும் எல்லாப் பாடல்களுக்குமே ரேடியோவில் நாம் கேட்கும் யேசுதாஸின் அதே குரல்தான் என்றான். அப்போதுதான் எனக்குப் புரிந்தது. மலையாள சினிமாவின் மிக அழகான கதாநாயகன் பிரேம் நஸீரைத் தான் யேசுதாஸ் என நினைத்துக் கொண்டிருக்கிறான் தங்கன். அவனைச் சொல்லிக் குற்றமில்லை. பிரேம் நஸீருடைய குரலும் யேசுதாஸின் குரலும் ஏறத்தாழ ஒரே மாதிரிதான். இப்பூமியில் மிகவும் அழகான மனிதனின் இனிமையான குரல் என்றால் அது யேசுதாஸின் குரல் அல்லாமல் வேறேது?
பல தலைமுறை மலையாளிகளைப் போல எனது பால்ய காலங்களும் யேசுதாசின் பாடல்களாலேயே நிரம்பியிருந்தது. அக்காலத்துக் காற்றலைகளை நிரப்பிய பெரும்பாலான மலையாள சினிமாப் பாடல்களிலும் பக்திப்பாடல்களிலும் ஒலித்த ஆண்குரல் யேசுதாஸாகவே இருந்தது. இசையைக் கேட்கத் தொடங்கிய நாட்களிலிருந்து யேசுதாஸின் குரலுக்கும் அவரது பாடும் முறைக்கும் நான் தீவிரமான ரசிகனாக இருந்தேன். யேசுதாசின் குரல் ஒலிக்காத ஒரு உலகத்தை எங்களால் யோசிக்கவே முடியவில்லை. அப்போதும் சரி, இப்போதும் சரி யேசுதாஸின் குரல் இல்லாத ஒரு இசையை, பாடல்களை எண்ணிப் பார்க்கக் கூட இயலாமல் இருக்கிறார்கள் பலகோடி மலையாளிகள். கேரளாவை ‘கடவுளின் சொந்த நாடு’ என்று சொல்வதைப் போலவே யேசுதாஸை ‘கடவுள் தந்த பரிசு’ என்றே அழைக்கிறார்கள் அவர்கள்.  
1950களின் ஆரம்பத்தில் மெஹ்பூப், கோழிக்கோடு அப்துல்காதர், கே.எஸ்.ஜார்ஜ் போன்றவர்களின் குரல்களாலே மலையாள சினிமாப் பாடல்கள் அமைந்திருந்தன. பின்னர் கமுகர புருஷோத்தமன், கே.பி. உதயபானு போன்றவர்கள் பின்னணிப் பாடகர்களாக நுழைந்து பலவருடங்களாக நிலைத்திருந்தார்கள். ஆயினும் இவர்களில் எவரும் ஓரு உச்ச நட்சத்திரப் பாடகராக ஆகவில்லை. பின்னர் மலையாளத்துக்கு தெலுங்குப் பாடகர்களின் வரவு நிகழ்ந்து அவர்களின் ஆதிக்கம் ஆரம்பித்தது. 1953ல் மலையாள சினிமா பின்னணிப் பாடகராக நுழைந்த ஏ.எம்.ராஜா மலையாளத்தின் முதல் நட்சத்திரப் பாடகராக ரசிகர்களால் அங்கீகரிக்கப்பட்டார். பின்னர் வந்த பி.பி.ஸ்ரீனிவாஸும் மிகப்பெரிய அங்கீகாரத்தை அடைந்தார். ஆனால் இதெல்லாம் யேசுதாஸின் வருகை வரை மட்டும்தான் நீடித்தது. அறுபதுகளின் மத்தியில் ஆரம்பித்த யேசுதாஸின் இசை ராஜாங்கம் நாற்பது வருடங்களுக்கும் மேல் நீடித்தது. தற்போது எழுபது வயதைத் தாண்டிய அவரின் இடத்தை நிரப்ப யாராலேயும் இயலவில்லை.
மலையாள சினிமா துளிர்விட்டு வந்த 1940களின் கடைசியில் கடலால் சூழப்பட்ட ஃபோர்ட் கொச்சி பகுதியில் கட்டச்சேரி அகஸ்டின் ஜோசப் என்ற ஒரு பாடக நடிகர் இருந்தார். நாடகங்களில் சிறப்பாகப்பாடி நடிக்கும் திறன் கொண்டவராகவும் பொலிவான தோற்றமுடையவராகவும்  இருந்தார்  அவர். சினிமாவில் பாடி நடித்து திரையுலகின் ஒரு பிரபல நட்சத்திரமாக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வந்தவர். 1950 களின் முதல் பகுதியில் சினிமாவில் பாடவும் நடிக்கவும் அவ்வப்போது சில வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் திரையுலகில் எந்த வெற்றியும் அவருக்குக் கிடைக்கவில்லை. விரைவில் பாடி நடிக்கும் நடிகர்களின் தேவையே இல்லாத காலமும் வந்தது. ஐந்து குழந்தைகளுடன் மிகவும் சிரமம் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தார். அவருடைய முதலாவது மகனாக 1940ல் பிறந்த கட்டச்சேரி ஜோசப் யேசுதாஸ் என்பவரே பிறகு கே.ஜே.யேசுதாஸ் என்றழைக்கப்பட்டார்.
தனது மகனின் ஐந்தாவது வயதிலேயே அவனுடைய பாடும் திறமையை அறிந்து கொண்ட அகஸ்டின் ஜோசப், இசையின் ஆரம்ப பாடங்களைக் அவனுக்கு கற்றுக் கொடுத்தார். அவனது  தனித்துவமான திறமையை உணர்ந்து கொண்ட அவர் தன்னால் அடையமுடியாத இடத்தை தன் மகன் பெறவேண்டுமென்ற எண்ணத்தோடு அவனுக்கு இசைப் பயிற்சிகளை வழங்கினார். பள்ளியிலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும்  நடந்த பாடல் போட்டிகளில் அவரது மகனே சிறந்த பாடகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆனால் ஒரு கிறிஸ்துவராக இருந்து கொண்டு கர்நாடக இசையைக் கற்றுக்கொள்ள முயல்வதாக எல்லோராலும் பரிகசிக்கப்பட்டான் அவன்.
மிகுந்த ஏழ்மையிலேயே வளர்ந்தார் யேசுதாஸ். இசைப்படிப்புக்கான கட்டணம் செலுத்த முடியாததால் பல்வேறு இசைப்பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அவர் பின்னர் குறிப்பிட்டிருக்கிறார். ஆயினும் இசைப் பள்ளிகளில் சாதனையான மதிப்பெண்களுடனும் இரட்டைத் தகுதி உயர்வுகளுடனும் தனது இசைப் பாடங்களைக் கற்றுத்தேர்ந்தார். உயர்கல்விக்காக திருவனந்தபுரத்தில் உள்ள சுவாதித்திருநாள் இசைக்கல்லூரியில் சேர்ந்தார். அக்கல்லூரியில் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், செம்பை வைத்திய நாத பாகவதர் போன்ற புகழ்பெற்ற ஆசிரியர்களின் மிகவிருப்பமான மாணவராக அவர் திகழ்ந்தார் எனக் கூறப்படுகிறது. ஆனால் அவரது தந்தையால் கல்விச்செலவுகளை வழங்க இயலாததால் பாதியிலேயே அங்கிருந்து வெளியேறினார். திருவனந்தபுரத்தில் தங்கும் வசதி இல்லாததால் செம்மங்குடியின் வீட்டின் கார் கொட்டகையில் மாதக்கணக்கில் படுத்துறங்கியதாக யேசுதாஸ் பின்னர் குறிப்பிட்டிருக்கிறார்.
குழாய்த் தண்ணீரை மட்டும் குடித்துக்கொண்டு வாய்ப்புக்கள் தேடி சென்னையில் கணக்கில்லாத மைல்கள் நடந்து திரிந்ததையும் திறமையில்லாதவர் என பல இசையமைப்பாளர்களால் நிராகரிக்கப்பட்டதையும் பதிவு செய்திருக்கிறார். திருவனந்தபுரம் ஆல் இந்தியா ரேடியோ அவரது குரலை ஒலிபரப்புக்குத் தகுதியில்லாதது என நிராகரித்தது. கடைசியில் ஒருவழியாக 1962ம் ஆண்டு இயக்குனர் கே.எஸ். ஆண்டனி தனது கால்ப்பாடுகள் என்ற படத்தில் ஒரு சுலோகத்தின் நான்கு வரிகளைப் பாட வாய்ப்பளித்தார். இசையமைப்பாளர் எம்.பி.ஸ்ரீனிவாசன் இசையமைத்த அப்படத்தின் முக்கிய பாடகர் கே.பி. உதயபானு. யேசுதாஸின் வசீகரக் குரலைக் கவனித்த எம்.பி.ஸ்ரீனிவாசன் அப்படத்திலேயே ஒரு டூயட் பாடலையும் அவரைப் பாடவைத்தார். யேசுதாஸின் குரல் சினிமா வட்டாரங்களில் உடனடியாகப் பேசப்பட்டது. அதே வருடத்திலேயே மேலும் 7 படங்களில் பாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது! தனது மகன் வெற்றிப்பயணத்தைத் தொடங்கியிருப்பது பார்த்துவிட்டு 1964ல் காலமானார் அகஸ்டின் ஜோசப்.   
ஏறத்தாழ எல்லா இந்திய மொழிகளிலும் பாடியிருந்தாலும் மலையாளத்துக்கு அடுத்தபடியாக தமிழில்தான் யேசுதாஸ் நட்சத்திரப் பாடகராக மாறினார். ஆனால் மலையாளத்தைப்போல அவ்வளவு எளிதாக அவர் தமிழில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.1963 ஆம் ஆண்டில் வீணை எஸ்.பாலசந்தர் இயக்கி இசையமைத்த பொம்மை என்ற படத்தில்தான் முதன் முதலாகத் தமிழில் பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. “நீயும் பொம்மை நானும் பொம்மை" என்ற பாடல். அடுத்த தமிழ் படத்தில் வாய்ப்புக் கிடைக்க மேலும் ஒரு வருடம் காத்திருக்க நேர்ந்தது. காதலிக்க நேரமில்லை (1964) படத்தில் "என்ன பார்வை உந்தன் பார்வை" என்ற பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து பாடினார். 
அடுத்த பத்தாண்டுகள் தமிழில் சிறப்பான பாடல்கள் ஏதும் இல்லாமல் சென்றது யேசுதாஸுக்கு. ஆனால் இதுதான் மலையாளத்தில் யேசுதாஸ் உச்சமான படைப்பூக்கத்துடன் பாடிய காலகட்டம்.
பின்னர் எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் (1973) படத்தில் "தங்கத் தோணியிலே" பாடலைப் பாடினார். ஆனால் எம்.ஜி.ஆரின் "விழியே கதையெழுது '(உரிமைக்குரல்-1974) பாடல்தான் யேசுதாஸின் பெரிதும் ரசிக்கப்பட்ட முதல் தமிழ்ப்பாடல். அதன் பின்னர் எம் ஜி ஆர் நடித்த பல்லாண்டு வாழ்க (1975) படத்தின் அனைத்துப் பாடல்களையும் பாடும் வாய்ப்பும் யேசுதாஸுக்குக் கிடைத்தது. அதில் “போய்வா நதியலையே”, “அன்புக்கு நான் அடிமை," "ஒன்றே குலமென்று பாடுவோம்” போன்ற வெற்றிபெற்ற பாடல்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் "என்னை விட்டால் யாருமில்லை” (நாளை நமதே -1975), "இந்த பச்சைக் கிளிக்கொரு" (நீதிக்குத் தலைவணங்கு -1976) போன்ற பாடல்களையும் எம்.ஜி.ஆரின் நடிப்பில் பாடினார் யேசுதாஸ். சிவாஜி நடித்த படங்களிலும் பல வெற்றிப் பாடல்களை பாடினார். "மலரே குறிஞ்சி மலரே" (டாக்டர் சிவா), "கங்கை யமுனை இங்குதான் சங்கமம்" (இமயம்) போன்றவை உதாரணம். ஆனால் இதை எல்லாம் விட அவள் ஒரு தொடர் கதை'(1978) படத்தில் இடம்பெற்ற "தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு" பாடல்தான் யேசுதாஸை தமிழில் மிகவும் பிரபலமாக்கியது.
இளையராஜா தொடர்ந்து யேசுதாசுக்கு வாய்ப்புகள் வழங்கி வந்தார். பெரும் வெற்றிபெற்ற "பூவே செம்பூவே",  "ஆராரிரோ பாடிய தாரோ", "ராஜராஜ சோழன் நான்", "தென்றல் வந்து என்னைத் தொடும்", "கண்ணே கலைமானே", "பூங்காற்று புதிதானது", "வெள்ளைப்புறா ஒன்று" என பல இளையராஜாப் பாடல்கள் யேசுதாஸின் குரலில் வெளிவந்து மிகவும் பிரபலமடைந்தது. தமிழ் நாடு அரசின் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதை எட்டு முறை வென்றிருக்கிறார் யேசுதாஸ். "அதிசய ராகம்" (அபூர்வ ராகங்கள்), "செந்தாழம் பூவில்" (முள்ளும் மலரும்), "கல்யாண தேனிலா" (மௌனம் சம்மதம்), "உன்னிடம் மயங்குகிறேன்" (தேன் சிந்துதே வானம்) போன்று வெகுசிறப்பாக ரசிக்கப்பட்ட யேசுதாஸ் பாடல்களின் வரிசை நீளமானது.
தெலுங்கிலும் வெகுவாகப் பாராட்டப்பட்ட பாடகராக மாறினார். பல சூப்பர்ஹிட் பாடல்களுடன், ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகருக்கான விருதையும் ஆறு முறை பெற்று இருக்கிறார். மேகசந்தேசம் என்ற படத்தின் பாடல்களுக்காக அங்கு தேசிய விருதையும் பெற்றார் யேசுதாஸ். எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளிலும் கன்னட சினிமாவிலும் பல பிரபலமான பாடல்களுடன், மாநில அரசின் ஐந்து விருதுகளும் கிடைத்திருக்கிறது யேசுதாஸுக்கு. சலீல் சௌத்ரி இசையமைத்த சின்னா நின்னா முத்தாடுவே (1977) படத்தில் இடம்பெற்ற “ஜோ ஜோலாலி” என்ற அவரது பாடல் கன்னடத்தின் என்றென்றும் விரும்பப்படும், மிகவும் புகழ்பெற்ற தாலாட்டுப் பாடலாகும். 
யேசுதாஸை இந்தி சினிமாவுக்குக் கொண்டு சென்றவரும் சலீல்  சௌத்ரிதான். சலீல்தா இசையமைத்த ஆனந்த் மஹல் (1977) என்ற படத்திற்காக பதிவு செய்யப்பட்ட  “நி ச க ம ப நி” பாடலே யேசுதாஸின் முதல் இந்திப்பாடல். சலில்தாவின் இசையிலமைந்த சோட்டி ஸி பாத் என்ற படத்தில் இடம்பெற்ற “ஜானேமன்” என்ற பாடல் தான் அவரது பிரபலமடைந்த முதல் இந்திப் பாடல். அதன் பின்னர் இசையமைப்பாளர் ரவீந்திர ஜெயின் பிரபலமான பல பாடல்களை யேசுதாஸுக்கு வழங்கி அவருக்கென ரசிகர் கூட்டத்தை அங்கு உருவாக்கினார். 1976ல் வந்த சிட் சோர் என்ற படத்தில் இடம்பெற்ற “ஜப் தீப் ஜலே ஆனா”, “தூ ஜோ மேரெ சுர் மே” போன்ற பாடல்கள் மறக்கமுடியாதவை. ஜெய்தேவும் அற்புதமான சில பாடல்களை யேசுதாஸின் குரலில் உருவாக்கினார். ஏன் பப்பி லஹிரி கூட “ஜித் நா கரோ”, “மானா ஹோதும்” போன்ற இனிமையான பாடல்களை யேசுதாஸுக்கு வழங்கினார்.
சலில்தாவே யேசுதாசை வங்காளத்துக்குக் கொண்டு சென்று கமல்ஹாசன் நடித்த வங்கப்படமான கொபிதா உள்ளிட்ட படங்களில் பல சிறப்பான பாடல்களை அவருக்கு அளித்தார். மேற்கு வங்க அரசின் சிறந்த பாடகருக்கான விருதையும் ஒருமுறை பெற்றார் யேசுதாஸ். உலகில் மிக அதிகமாக பாடல்கள் பதிவு செய்யப்பட்ட பாடகர்களில் ஒருவர் யேசுதாஸாகும். கடந்த 48 வருடங்களில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட அவரது பாடலகள் பதிவாகியுள்ளன. ஏழுமுறை தேசிய விருதுகளையும், பத்மபூஷன், பத்மஸ்ரீ போன்ற விருதுகளையும் பெற்றிருக்கிறார். கேரளாவின் 16 மாநில அரசு விருதுகள் உட்பட மொத்தம் 34 மாநில அரசு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
திரைப்பாடல்களிலும் பக்திப் பாடல்களிலும் ஒரு உச்சநட்சத்திரமாக மாறிய பின்னர் யேசுதாஸ் தன்னை ஒரு கர்நாடக சங்கீதப் பாடகராகவும் முன்நிறுத்தினார். பல்வேறு கர்நாடக இசைக்கச்சேரிகளை உலகமெங்கும் நிகழ்த்தினார். இப்போதும் அவரது கச்சேரிகள் நிகழ்கின்றன.  கர்நாடக இசையை ஜனரஞ்சகமாக்க முயன்றவர்களில் முதலிடத்தில் இருப்பது யேசுதாஸே என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.
அவரது பக்திப்பாடல்கள் இதயத்தை உருகவைப்பவை என பல பக்தர்கள் கருதுகிறார்கள். வயதையும் காலத்தையும் கடந்த, என்றும் இனிமையான பாடகராகவே அவரை அவரது பெரும்பாலான ரசிகர்கள் எண்ணுகிறார்கள். 
இந்தியாவில் தோன்றிய பாடகர்களில் ஒரு மிகச்சிறந்த ஆண்குரலுக்குச் சொந்தக்காரர் யேசுதாஸ் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. திரை இசையில் யேசுதாசின் சாதனைகள் மகத்தானவை என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் கேரளாவில் பலர் நம்புவது போல உலகத்தில் பிறந்த பாடகர்களிலேயே மிகச்சிறந்தவர் யேசுதாஸா? இசையை விரும்பத் தொடங்கிய காலத்திலிருந்தே வாழ்வின் பின்னணி இசைபோல அமைந்த யேசுதாஸ் பாடல்களோடு வளர்ந்த எனக்கும் அவரது பாடல்களையும் பாடும்முறையையும் உணர்ச்சிவசப்படாமல் விலக்கிப் பார்ப்பது இலகுவானதாக இருந்ததில்லை. ஆனால் அப்படி விலக்கி பார்க்கும்போதெல்லாம் சங்கடமான முடிவுகளுக்குத் தான் நான் வந்து சேர்ந்ந்திருக்கிறேன்.
யேசுதாஸின் சோகப்பாடல்கள் கேரளாவின் ஒரு கலாச்சாரமாகவே ஆகிவிட்டது. தன் பாடல்கள் வழியாக யேசுதாஸ் கேரளாவின் வரலாற்றுச் சோகத்தை வளர்த்தெடுத்தார் என்று கூட சொல்லலாம். காதலோடு சம்பந்தப்பட்ட மெல்லிய துயரம், வேதனை, பிரிவு, காதல் தோல்வி மற்றும் மனச்சோர்வு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் எல்லாம் யேசுதாஸின் பாடும்முறையில் அற்புதமாக வெளிப்பட்டது. ஆனால் அவரது பாடல்கள் எல்லாவற்றிலும் துயரத்தின் இழையொன்று அடிநாதமாய் ஓடிக் கொண்டேயிருக்கும்.
மகிழ்ச்சியான உணர்வுகளையோ, கொண்டாட்டமான மனநிலையையோ வெளிப்படுத்துவதற்கான பாடலென்றாலும் அதிலும் மெலிதான சோகம் பரவுவதை நாம் உணர முடியும். இப்படியாக சந்தோஷமான மனநிலையை வெளிப்படுத்த வேண்டிய பாடல்கள் அவரது பாடும் தொனியால் சோகமான பாடலைப் போல் மாறிவிடும். உதாரணமாக, "ராஜராஜ சோழன் நான்" (ரெட்டைவால் குருவி), "உன் பார்வையில் ஓராயிரம்" (அம்மன் கோவில் கிழக்காலே) போன்ற பாடல்களை கவனமாக கேட்டுப் பாருங்கள். ஏன் அவரது டப்பாங்குத்து பாடல்களான "அடி கானக்கருங்குயிலே" (பூந்தோட்ட காவல்காரன்), "வச்சுக்கவா ஒன்ன மட்டும்" (நல்லவனுக்கு நல்லவன்) போன்றவற்றை  மீண்டும் கேட்டுப்பாருங்கள். மகிழ்ச்சிகளும் கொண்டாட்டங்களும் வர்ணிக்கும் பாடல்களில் சோகத்தின் கீற்றொன்று இழையோடிச் செல்வதை நிச்சயமாக உணர முடியும். இனிய இசை துயரமானதே என்று சொல்வார்கள். ஆனால் விதவிதமான உணர்ச்சிகள் வெளிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட திரைப்பாடல்கள் அனைத்துமே துயரப்பாடல்களாக மாறுவதும் ஒரு பெரும் துயரம் தானே!
தமிழ் சினிமா இசையமைப்பில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரேயொரு சாதனையாளர் மட்டுமே கோலோச்சி வந்திருக்கின்றனர். ஆனால் மலையாள சினிமா இசையின் பொற்காலம் என்பது மிகச்சிறந்த பல இசையமைப்பாளர்கள் ஒரே நேரத்தில் பங்குபெற்றதாகவே அமைந்திருந்தது. ஆனால் அந்தப் பாடல்களில் பெரும்பாலானவை யேசுதாஸின் குரலில்தான் வெளி வந்தது. அதனால் அந்தப் பாடல்களின் இசை அமைப்பில் இருந்த பன்முகத்தன்மை  பாடல்களின் வெளிப்பாட்டில் இல்லாமல் போய்விட்டது.
யேசுதாஸின் குரலும் ஆளுமையும், திரை இசை ரசிகர்கள் மத்தியில் அவருக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரமும் காரணமாக, யேசுதாஸின் பாடும்முறை மட்டுமே சிறந்தது என்ற ஒரு பிரமை மலையாள இசையை ஆக்ரமித்தது. அவரது கம்பீரமான குரலும் பாடல் முறையின் சோக பாவமும் எல்லாப் பாடல்களுக்கும் பாடகர்களுக்கும் அளவுகோளானது. மற்ற பாடகர்கள் உள்ளே வராமல் போனதற்கும், வந்தவர்கள் பிரபலமடையாமல் போனதற்க்கும் இதுதான் காரணம். பிறகுவந்த பாடகர்கள் எல்லோருமே யேசுதாஸின் பாணியிலேயே பாடுவதைக் கேட்கவேண்டிய நிலைமைதான் மலையாளப் பாடல் ரசிகர்களுக்கு நேர்ந்தது. ஒவ்வொரு வளர்ந்து வரும் பாடகர்களும் அவரை நகலெடுப்பதற்கு மட்டும் தான் முயற்சி செய்தார்கள். சோகமோ வலியோ அல்லாத பிற உணர்வுகள் மலையாளப் பாடல்களுக்கு அன்னியமாகி விட்டது.
அவரது முந்தைய காலப் பாடல்களில், குறிப்பாக பாபுராஜ், சலில்தா போன்றவர்கள் இசையமைத்த பாடல்களில் உணர்ச்சிபூர்வமான ஆழங்களும், நுட்பமான ஏற்ற இறக்கங்களுடன் கூடிய பாவனைகளும் நிரம்பியிருந்தது. ஆனால் மெல்ல மெல்ல அவரது பாடல்களில் இருந்த நுட்பமான வேறுபாடுகளின் இனிமை இல்லாமல் போனது. காலங்கள் செல்லச் செல்ல அவரது பாடல்கள் முழங்கும் குரல் மட்டுமாக மாறி விட்டது. ஏற்ற இறக்கங்களுடன் ஒலிக்க வேண்டிய ஒவ்வொரு சுரமும், ஒரே தொனியில் ஒலித்து இறுக்கமானதாக வெளிப்பட்டது.
தனது பாடல்களில் இடம்பெறும் ஒவ்வொரு சுரமும் ஒரே மாதிரியான ஒலி அதிர்வுடன் ஓங்கி ஒலிக்க வேண்டும் என விரும்பிய தேவராஜன் போன்ற இசை அமைப்பாளர்களின் தாக்கமும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். யேசுதாஸ் கர்நாடக இசையில் அதீத கவனம் செலுத்தத் தொடங்கிய பின்னர் இப்படி ஓங்கி ஒலிக்கும் பாடும்முறையே அவரது நிரந்தரமான பாணியாகி விட்டது.
அவரது கர்நாடக இசையோ ஆழ்ந்த கர்நாடக இசை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படவுமில்லை. தீவிர கர்நாடக செவ்வியல் இசை ரசிகரும் விமர்சகருமான ஆர்.ராமகிருஷ்ணன் யேசுதாஸின் கர்நாடக சங்கீதத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் “யேசுதாஸ் மிகச்சிறந்த குரல்வளம் உடையவர். ஆனால் குரல் மட்டுமே இசையல்ல. நல்ல குரல் என்பது நல்ல கையெழுத்தைப் போன்றதுதான். கையெழுத்தை அழகாக எழுதுபவர் அம்மொழியின் விற்பன்னர் என்று அர்த்தமல்ல. மொழி தனக்கென ஒரு இலக்கணத்தையும், பின்பற்றவேண்டிய பல விதிமுறைகளையும் கொண்டுள்ளது. இலக்கிய அறிவு பாலர் பள்ளி மாணவர்களால் மதிப்பிடப்படுவதல்ல. அதே மாதிரி செவ்வியல் இசைப்பாடகர்களின் பாடும் முறை இசையறிவு கொண்டவர்களாலும், அதைப்  புரிந்துகொண்டவர்களாலுமே மதிப்பிட முடியும். கர்நாடக இசையைப் பற்றி எதுவுமே அறியாதவர்களே ‘யேசுதாஸ் மிகச்சிறந்த சங்கீத வித்வான்’ என்று சொல்வார்கள்” என்றார்.
யேசுதாஸும் தன்னுடைய கர்நாடக சங்கீதத்தைப் பற்றி உயர்வான தன்னம்பிக்கையுடன் இருந்ததில்லை எனப்படுகிறது. “என்னுடைய இசையைக் கர்நாடக சங்கீதமாக கருதமுடியாதென்றால் அதை ‘பாரதீய சங்கீதம்’ என அழைத்துக் கொள்ளுங்கள்” என்றுகூட அறிவித்திருக்கிறார் அவர். கர்நாடக இசையை ஜனரஞ்சகமாக்கும் முயற்சிகளும் தேவை இல்லாதவை. செவ்வியல் இசை முற்றிலுமாக ஒருபோதும் ஜனரஞ்சகமாகப் போவதில்லை. அது தேவையுமில்லை.
மலையாளம் அல்லாத பிற மொழி வார்த்தைகளைச் சரியாக உச்சரிப்பதில் யேசுதாஸ் பிழைசெய்து கொண்டேயிருந்தார் என்பது அவரது இன்னுமொரு பலவீனம். தென்னிந்திய மொழிகளில் அடைந்த இடத்தை இந்தியில் அவர் அடையமுடியாமல் போன தன் காரணம் கூட உச்சரிப்பில் இருந்த இந்தக் குறைபாடே. யேசுதாஸின் மலையாள உச்சரிப்பு ஈடு இணையற்றது என்று சொல்வார்கள் அவரது ரசிகர்கள். ஆனால் மலையாளத்தில்கூட ‘ஸ்னேஹம்’, ‘ப்ரஹ்மம்’ போன்ற வார்த்தைகளை ‘ஸ்னேகம்’ ‘ப்ரம்ஹம்’, என்று தான் அவர் உச்சரிக்கிறார்.
2004ல் அவருடைய பாடல்களை மேடையில் பாடுவதற்கு ராயல்டி தொகை தரவேண்டும் என்று புது தலைமுறை பாடகர்களிடம் கட்டளையிட்டு சர்ச்சைக்கு ஆளானார் யேசுதாஸ். “யேசுதாஸின் பாடல்களை இசைநிகழ்ச்சிகளில் பாடுவதாக இருந்தால் அதற்கு ராயல்டி  தொகை தரவேண்டும்” என யேசுதாசின் மகன் வினோத் யேசுதாஸ் நிர்ப்பந்திப்பதாக பின்னணிப் பாடகர் உன்னிமேனன் கூறியபோது  பெரும் சர்ச்சை உருவானது. மலையாளத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் யேசுதாஸின் பாடலை அவருக்கு ராயல்டி செலுத்தாமல் பாட அனுமதி மறுக்கப்பட்டதாக மது பாலகிருஷ்ணன் என்ற பாடகர் குறிப்பிட்டார். இந்த சர்ச்சையினால்  யேசுதாஸ் ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தார்கள். இதனால் முதன்முதலாக கேரளத்தில் அவரது புகழுக்கு சரிவு ஏற்பட்டது. பின்னர் அவர் இதுகுறித்த தனது அறிவிப்புகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். இதுபோல் மலையாளத் திரை இசையை முற்றிலுமாகத் தன் வியாபாரமாக்கவும் ஒரு கட்டத்தில் முயன்றிருக்கிறார் யேசுதாஸ். 70களில் அவர் ஆரம்பித்த இசை நிறுவனமான தரங்கிணி ரெக்கார்ட்ஸுக்கு இசை வினியோக உரிமை அளிக்காத திரைப்படங்களிலோ இசைத்தட்டுகளிலோ பாட அக் காலகட்டத்தில் அவர் முற்றிலுமாக மறுத்தார். 
யேசுதாஸின் குரல் இசைத்தன்மை குறைந்ததாக மாறிப் பலகாலம் ஆகிவிட்டது. தொண்ணூறுகளின் மத்திக்குப் பிறகு சிறப்பாகப் பாடிய பாடல்களை அவரிடமிருந்து நாம் கேட்டது குறைவே. அவரது சோகப் பாடல்கள்கூட ஒரு முழக்கமாக மாறிப்போனது. ஒரு முறை யேசுதாஸ் வெளிப்படையாக ‘லதா மங்கேஷ்கரின் குரல் முந்தைய காலங்களில் இருந்த இனிமையை இழந்துவிட்டது.  எனவே அவர் பாடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும்' என வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் தன் பாடும் குரல் மோசமானதாக மாறிவிட்ட பின்னரும் அவர் பாடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை! சமீபத்தில் வந்த பழசி ராஜா படத்தின் ‘ஆதியுஷஸ் சந்த்ய’ போன்ற பாடல்களை உன்னிப்பாகக் கேட்டுப்பாருங்கள்.
மதம், கடவுள் சார்ந்த அவருடைய நிலைப்பாடுகள் கூட நிச்சய மற்றதாகவே தோன்றுகிறது. எந்தக் கேள்விக்குப் பதில் அளித்தாலும் அதை மதம் சார்ந்த உரையாடலுக்குள் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர் அவர். மதத்துடனோ கடவுளுடனோ எந்தச் சம்பந்தமும் இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றி கருத்துச் சொல்வதாக இருந்தாலும் இறுதியாக அதில் கடவுளை இணைத்து விடுவார். “எது நடந்தாலும் கடவுளால் முன் தீர்மானிக்கப்பட்ட தாய் இருக்கிறது” என்ற கோட்பாட்டில் தீவிர நம்பிக்கை உடையவராக இருப்பவர் அவர்.  அப்படியென்றால் ஏன் இன்னும் குருவாயூர் கோவிலுக்குள் செல்வதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்? அவரைக் குருவாயூர் கோவிலுக்குள் நுழையவிடாத உயர்ஜாதி ஆதிக்கமும், மதவெறியும் கூட அவர் நம்பும் ஜகதீஸ்வரனால் முன் தீர்மானிக்கப்பட்டதுதானே?
நான் இப்போதும் யேசுதாஸின் அற்புதமான பல பாடல்களின் ரசிகனே. ஆனால் நாம் முன்பு ரசித்த, நம்முள் தாக்கத்தை ஏற்படுத்திய இலக்கியங்களை மறுவாசிப்புச் செய்வது போல, திரைப்படங்களை மறுபார்வைக்கு உள்ளாக்குவது போல, ஒரு காலகட்டத்தில் நம்மை பாதித்த இசையையும், பாடல்களையும் உணர்ச்சிவசப்படாமல் மீண்டும் கூர்ந்து கேட்பதும் நமது கலை உணர்வுகளும் மனித உணர்வுகளும் மேம்பட அவசியமானதேயாகும். 
                                                                                                                      by
                                                                     arasu
 

அதிசயம் ஆனால் உண்மை


என் 
பெயரினை 
எழுதி,
கண்ணாடியில் 
பார்த்தேன்..

அதிசயம் 
ஆனால் 
உண்மை!!!!

என்னவளின் 
பெயர் தான்
பிம்பமாய் 
விழுந்தது

இது 
மேஜிக் 
அல்ல.. 
காதல் !

நேசம்

நீ
எனக்கு இல்லை என்ற போதும் இவ்வாழ்வை வெறுக்கவில்லை
ஏனென்றால்
வெறுத்ததையெல்லாம் நேசிக்க வைத்தவள் நீ !!!
                                                                                                              BY.
                                                                                                                      arasu
ARASU
ARASU